செய்திகள் மாநில செய்திகள் வெடிகுண்டு இருக்க என்று கேட்டது ஒரு குத்தமா…? பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் …!!! Sathya Deva12 August 2024084 views கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் செல்ல விமான நிலையத்துக்கு வந்த 42 வயதான மனோஜ் குமார் என்பவரது பையையும் அதிகாரிகள் சோதித்துள்ளனர். இவரிடம் எந்த பிரச்சனையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தபோது, எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார். அவர் எதோ ஜோக் அடிப்பது போல் இதைக் கேட்டிருந்தாலும், வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாணை நடந்த அவரை உள்ளூர் போலீசிடம் பாதுகாப்பு அதிகரிகள் ஒப்படைத்தனர்.