சினிமா செய்திகள் செய்திகள் விரைவில் வெளியாகும்….எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்….நடிகர் தனுஷ் தகவல் வெளியீடு….!! Gayathri Poomani12 June 2024092 views நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான “ராயன்” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா ஆகியோர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வடசென்னை கதைக்களமாக கொண்டு உருவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சென்ற டிசம்பர் மாதம் ராயன் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தது என தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இப்படத்தில் தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அண்மையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.