செய்திகள் ட்ரெண்டிங் மாநில செய்திகள் விடுதி சட்னியில் எலி…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கிய நெட்டிசன்கள்….!! Inza Dev11 July 2024084 views தெலுங்கானா மாநிலம் சுல்தாபுரில் உள்ள பொறியியல் கல்லூரியில் லட்சுமி காந்த் என்பவர் படித்து வருகிறார். அவர் தனது விடுதியில் உள்ள கேண்டினில் சட்டினி நிறைந்த பெரிய பாத்திரத்தில் உள்ளே எலி ஒன்று நீந்துவதை கண்டு அதனை வீடியோ எடுத்து “சட்னியில் எலி” என்று தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி 75k பார்வையாளர்களை கடந்துள்ளது .இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் 2016 முதல் 2020 வரையில் இந்த விடுதி தரமான உணவை வழங்கப்படவில்லை இன்றும் இந்த நிலைமை தொடர்வதை கண்டு வருத்தமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை விசாரணை நடத்த முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.