செய்திகள் மாநில செய்திகள் வயநாடு பாதிப்புகளை காண சென்ற கேரளா சுகாதார அமைச்சர்…விபத்தில் சிக்கினார் …!!! Sathya Deva31 July 20240127 views கேரளாவில் பெய்த பருவமழையின் கோரத்தாண்டவத்தால் மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வயல் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் காண சென்றபோது அவரது வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. உடனே அவரை மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.