சினிமா செய்திகள் தமிழ் சினிமா வசூல் வேட்டையில் “கொட்டுக்காளி” இதுவரை செய்த மொத்த வசூல்… இத்தனை கோடியா…? Sowmiya Balu27 August 2024081 views நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இன்று மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கருடன் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இந்நிலையில், சூரி நடிப்பில் கடந்த 23ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”கொட்டுக்காளி”. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கி இருந்தார். இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் இதுவரை 1.35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.