சினிமா செய்திகள் தமிழ் சினிமா வசூல் வேட்டையில் “இந்தியன் 2″… இத்தனை கோடியா? வெளியான அப்டேட்…!!! Sowmiya Balu17 July 2024082 views இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த அப்டேட் ரிலீஸாகியுள்ளது. விமர்சனங்களை தாண்டி இதுவரை இந்த படம் 135 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.