உலக செய்திகள் செய்திகள் வங்காள தேசத்தில் வன்முறை…எல்.ஐ.சி அலுவலகம் இன்று மூடப்பட்டது…!!! Sathya Deva5 August 20240108 views வங்காள தேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த வன்முறையால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்வதாலும் சமூக அரசியல் பதற்றம் அதிகரிப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி அலுவலகம் இன்று மூடப்பட்டது. ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7ம் தேதி வரை எல்.ஐ.சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ. .சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக இந்தியா-வங்காள தேசம் எல்லை முழுவதும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.