உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம்….வன்முறையால் 29 பேர் பலி…!!! Sathya Deva7 August 20240104 views வங்காளதேசத்தின் நடந்த வன்முறையில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அக்கட்சி தலைவர்களின் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடி வீடுகளுக்கும் தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமிலீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29 மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். சத்கிராவில் அவாமி லீக் தலைவர்களில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டன. மேலும் 4 பேர் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போக்ராவில் உள்ள அவாமில் லீக்கின் இரண்டு தலைவர்களின் உடல்களை கண்டெடுத்தனர் என கூறப்படுகிறது.