செய்திகள் மாநில செய்திகள் ரீல்ஸ் எடுத்ததால் விபரீதம்…7ஆம் வகுப்பு மாணவன் பலி…!! Sathya Deva24 July 20240112 views மத்தியபிரதேச மாநிலம் மோனேரா மாவட்டத்தில் கரன் என்ற மாணவர் வசித்து வருகிறார். அந்த மாணவன் தற்கொலை செய்வது போல் இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்சை அவன் நண்பர்களுடன் பார்த்துள்ளான். இந்த மாதிரி தானும் ரீல்ஸ் செய்தால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்று கரண் எண்ணி உள்ளான். ஆகவே தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல் நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது கழுத்தை கயிறு இறுக்கி உள்ளது. உடனே மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளான். இதனை பார்த்த அவரது நண்பர்கள் நடிப்பதாக நினைத்துள்ளனர். பின்னர் உண்மை அறிந்து கரனின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர். இதனை அறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கரண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் ரீல்ஸ் எடுத்த மொபைல் போனை கைப்பேற்றிய போலீசார் இந்த விவாகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.