உலக செய்திகள் செய்திகள் மேற்கு வங்காளம்…பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய்…!!! Sathya Deva22 August 20240118 views மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது..இந்த கொலை தொடர்பாக மருத்துவமனையில் தன்னார்வ ஊழியர் சஞ்சய் ராய் என்பவரை போலீஸ் கைது செய்தனர். இவரை டெல்லி ஃபாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்தில் இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் முன்னதாக நடந்த சம்பவம் பற்றி கூறியிருந்தார். அதில் சம்பவம் நடந்த அன்று அவர் கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்றதாகவும் பின்னர் நண்பர்கள் தன்னை மருத்துவமனையில் இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறியிருந்தார். அதன் பின் அவர் தூங்கலாம் என்று ஆடிட்டோரியத்திற்கு சென்ற போது அங்கு பெண் மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்தார் எனவும் அப்போது அவரை பலாத்காரம் செய்தேன் என்றும் ஒப்புக்கொண்டார். இவர் அந்த ஆடிட்டோரியத்திற்கு அதிகாலையில் செல்லும் காட்சி சி சி டிவியில் பதிவாகியுள்ளது. இந்த வாக்குமூலம் வழக்கிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலில் வக்ரம் செய்த ஆசாமி என்ற முடிவுக்கு சிபிஏ வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.