செய்திகள் மாநில செய்திகள் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா…ராகுல்காந்தி வாழ்த்து…!!! Sathya Deva18 August 2024078 views முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு அறிக்கை ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், “கலைஞரின் தொலைநோக்குப் பார்வை கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமாக வாழ வழி வகுத்தது. அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாடு ஒரு தைரியமான பாதையில் பயணித்தது. அவரது கொள்கையில் இருந்த தெளிவு தமிழ்நாடு, முன்னோடியாக திகழ உதவியது. அவருக்கு நினைவு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவதற்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “கலைஞரின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.