சினிமா செய்திகள் தமிழ் சினிமா “மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”… ராயன் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி…!!! Sowmiya Balu26 July 20240120 views நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”உங்களுடைய ஐம்பதாவது படத்திற்கு வாழ்த்துக்கள் தனுஷ். உங்களின் அயராத உழைப்பு மற்றும் சினிமா மீதான ஆர்வத்துக்கும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என அவர் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.