செய்திகள் மாநில செய்திகள் மாதவிடாய் விடுமுறை…ஒடிசா மாநிலம்…!!! Sathya Deva15 August 20240100 views ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது என கூறினார். அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளது.