உலக செய்திகள் செய்திகள் மனைவி போட்ட ஒரு புகைப்படம்…. வசமாக சிக்கிய கடத்தல் மன்னன்…. கைது செய்த போலீஸ்….!! Sathya Deva16 July 2024084 views முன்னாள் விமானியாக இருந்தவர் ரெனால்ட் ரோலண்ட். இவர் போதை பொருள் கடத்தியத்திற்காக தேடப்பட்டு வருகிறார். இவர் 5 ஆண் டுகளில் போதைப்பொருள் கடத்தியதில் 860.2 மில்லியன் பவுண்டுகளை சம்பாதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெனால்ட் கடந்த வாரத்தில் தனது மனைவியுடன் பிரேசிலில் உள்ள குவாருஜாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மனைவி இணைய பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் . காவல்துறையினர் அவர்களது இருவரின் சமூக ஊடகங்களையும் கண்காணித்து வந்ததால் அந்த புகைப்படங்களை பார்த்த போலீஸ்சார் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். பின்பு அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது.