செய்திகள் மாநில செய்திகள் மத்திய பிரதேசம்…காதலை மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…!!! Sathya Deva31 July 20240114 views மத்திய பிரதேசம் ஜபல்பூரில் 42 வயது ஆன சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார். சப்னா என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. இதனால் நரேந்திர பஞ்சாபி அவரின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து சப்னாவை தொந்தரவு செய்ததால் அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கோபம் அடைந்த நரேந்திர பஞ்சாபி பூக்கடையில் வேலை செய்து வந்த சப்னா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நரேந்திர பஞ்சாபி மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தார் என கூறப்படுகிறது.