செய்திகள் மாநில செய்திகள் மத்திய கல்வி அமைச்சகம்…தரவரிசை பட்டியல் வெளியீடு…!!! Sathya Deva12 August 20240126 views மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது .அதை போன்று 2024 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த தரவரிசையில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது முறையாக முதலிடத்தை பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன. பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன. மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.