செய்திகள் மாநில செய்திகள் மத்திய அரசு வழங்கும் நிதிவேண்டாம்….இமாச்சல அரசு…!!! Sathya Deva28 July 20240103 views மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பராபட்சம் காட்டியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்காக ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு இமாச்சலப் பிரதேச அரசுக்கு நிதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக இமாச்சில அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் மாநில அரசானது தொழில் பூங்கா அமைக்க இதுவரை ரூபாய் 74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பத்தின்படி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூபாய் 30 கோடியை திருப்பி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூபாய் 350 கோடியாகும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசுகையில் 265 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்படும் நிலையில் மத்திய அரசு வழங்கிய 30 கோடி நாங்கள் வாங்கினால் இந்த வளாகத்தில் உள்ள நிலங்களை தொழிலதிபதற்கு ஒரு சதுர அடி ஒரு ரூபாய்க்கும் ஒரு யூனிட் மின்சாரம் 3ரூபாய்க்கும் மற்றும் அனைத்து வசதிகளிலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய நிலமை ஏற்படும் என்று தெரியப்படுத்தி உள்ளார். எனவே எங்களது நிதி திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அடுத்த 5 மற்றும் 7 வருடங்களில் மத்திய அரசுக்கு ரூபாய் 500 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.