செய்திகள் மாநில செய்திகள் மகாராஷ்டிரா மாநிலம்…மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயற்சி…!!! Sathya Deva17 August 2024093 views மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அடல் சேது என்றும் அழைக்கப்படும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பிலிருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடல் சேது மேம்பாலத்தின் பாதுகாப்பு தடுப்பு மீது இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் அருகே, வாடகை காரும், கார் ஓட்டுநரும் இருந்தனர். அப்போது, ரோந்து வாகனத்தில் போலீசார் அருகே வந்த நிலையில், அந்த பெண் எதையோ கடலில் தூக்கி எறிந்து, அடுத்த நொடியே திடீரென கடலில் குதிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத கார் ஓட்டுநர் பெண்ணின் தலை முடியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர், ரோந்து போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து, பெண்ணை கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் ரீமா முகேஷ் படேல் என்பதும், அவர் மும்பையின் வடகிழக்கில் உள்ள புறநகரான முலுண்டில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 38 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார். டோம்பிவ்லியில் வசித்து வந்த பொறியியலாளர்ஸ்ரீனிவாஸ், மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பின் நவா ஷேவா முனையில் தனது காரை ஓட்டிச் சென்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிறுத்தியதை பாலத்தின் சிசிடிவி காட்சிகள் காட்டியது என்பது குறிப்படத்தக்கது.