சினிமா செய்திகள் தமிழ் சினிமா “மகாராஜா” படம் பார்த்து பாராட்டிய நடிகர் விஜய்… வெளியான புகைப்படம் வைரல்…!!! Sowmiya Balu19 July 2024077 views தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் மகாராஜா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. இந்த படத்தை பார்த்த ரசித்த நடிகர் விஜய், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஆகியவர்களை நேரில் சந்தித்து இதுவரையும் பாராட்டியுள்ளார். இது குறித்து இயக்குனர் நித்திலன், ”விஜய் அண்ணா! இந்த சந்திப்புக்கு நன்றி உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். இந்த திரைப்படத்தை பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை பெருமைப்படுத்துகிறது. உங்கள் அன்பு மற்றும் உங்களின் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்” குறிப்பிட்டுள்ளார்.