உலக செய்திகள் செய்திகள் போர்க்களத்தில் பிறந்த குழந்தை….நலமுடன் உள்ளதாக தகவல்…!!! Sathya Deva23 July 20240110 views பாலஸ்தீனிம் நகரமான காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரவேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டு வருகின்றது. இதனால் 9 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலினால் ஆண், பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் இருந்து வருகிறது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளன. இஸ்ரவேலின் தாக்குதலை நிறைமாத கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் உயிரிழந்த பெண்னின் வயிற்றுக்குள் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றி உள்ளனர். அந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் போர்க்களத்திற்கு நடுவே பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை தனது தாயை இழந்தது அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.