சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! 100 கோடி வசூல் செய்த “தங்கலான்”… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu27 August 20240101 views இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி, இந்த தங்கலான் படம் ரிலீசாகி 9 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் இதுவரை உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாவதால் இந்த படம் இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.