சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! “வாழை” படத்தின் OTT ரிலீஸ் எப்போது..? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!! Sowmiya Balu20 September 20240132 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.