சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! ரஜினியுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்… சூப்பர் அப்டேட் வெளியீடு…!!! Inza Dev10 July 2024075 views தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் பகத் பாசிலுக்கு இருக்கும் மவுசு அதிகரித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தசரா விஜயன், பகத் பாசில், அமிதாபச்சன், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி ”கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஏற்கனவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஜினியுடன் பகத்பாசில் ‘கூலி’ படத்திலும் இணைந்து நடிக்க இருப்பதாக சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.