சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! பாடலாசிரியராகும் தனுஷின் மகன்… வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu28 August 2024088 views தனுஷ் இயக்கி வெளியான ”ராயன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்த படமான ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ”கோல்டன் ஸ்பேரோ” வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இது குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தனுஷின் மூத்த மகனான யாத்ரா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதுவே இவர் எழுதும் முதல் பாடல் ஆகும்.