சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! இவர்கள் தான் “பிக்பாஸ் 8” போட்டியாளர்கள்… வெளியான அப்டேட்…!!! Sowmiya Balu28 August 2024077 views சின்னத்திரையில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் 8வது சீசனில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை கிரண், யூடியூபர் டிடிஎப் வாசன், குக் வித் கோமாளி ஷாலின் சோயா, நடிகர் ரியாஸ் கான், அமலா சாஷி, பூனம் பஜ்வா, ப்ரீத்தி முகுந்தன், அருண் பிரசாத், ஜெகன், ஆர்ஜே ஆனந்தி மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப இருப்பதாக இணையத்தில் தகவல் வலம் வருகிறது.