செய்திகள் மாநில செய்திகள் பெங்களூர் காபி ஷாப்…கழிவறையில் கேமராவை கண்டுபிடித்த பெண்…!!! Sathya Deva12 August 20240170 views பெங்களூரில் பெல் ரோடு பகுதியில் உள்ள பிரபல காப்பி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அந்த போன் ஏரோபிலேன் மோடில் இருந்து ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். செல் போன், அந்த காப்பி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்துள்ள நிர்வாகம், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. காப்பி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.