உலக செய்திகள் செய்திகள் பிரதமர் மோடி உரை…விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ்…!!! Sathya Deva16 August 20240106 views நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மிக நீண்ட உரையினை நேற்றைய தினம் நிகழ்த்தினார். அவரது உரையில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறினார். இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. மோடியின் உரையைப் பகிர்ந்து அவர், மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை விடுதலையாகி வெளியே உள்ள பாலியல் குற்றவாளிகள் தற்போது சிரித்துக் கொண்டுள்ளனர். எப்போது நீங்கள் சொல்வதுபோல் நடந்து கொல்லப்போகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.