உலக செய்திகள் செய்திகள் பிரதமர் நரேந்திர மோடி….உக்ரைன் தலைநகர் கீவ் பயணம்….!!! Sathya Deva19 August 20240122 views பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் வருகிறது. இதனிடையே இருநாட்டு போர் விவகாரத்தில் நேரடியாக தலையிட விரும்பவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.இதனால் ரஷியா மற்றும் உக்ரைன் இடையில் தகவல் பரிமாற்றத்திற்கு பாலமாக செயல்பட இந்தியா உதவியாக இருக்கும் என்று தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் மூத்த அதிகாரி உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மோடி மிகப்பெரிய பங்கு வகிக்கலாம் என்று தெரிவித்தார் . எனினும், ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இல்லை என்றும் இருதரப்புக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் இந்தியா பாலமாக செயல்படும் என்று தெளிவாக தெரிவித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,இந்த தகவல் இந்தியா சார்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.