சினிமா செய்திகள் தமிழ் சினிமா “பிக்பாஸ்” கூப்பிட்டாங்க…நோ சொல்லிட்டேன்! இளம் நடிகை சொன்ன லேட்டஸ்ட் தகவல்…!!! Sowmiya Balu26 August 2024095 views சின்னத்திரையில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் சினிமா பணிகள் காரணமாக என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என கமல்ஹாசன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். பிக்பாஸ் சீசன் 8ன் அடுத்த தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள பிக்பாஸிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், நான் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் ,நான் ரொம்ப சீரியஸான ஆளு. அது எனக்கு செட் ஆகாது. 100 நாள் ஒரே வீட்டில் என்னால இருக்க முடியாது எனக்கூறி நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார்.