உலக செய்திகள் செய்திகள் பாரீஸ் ஒலிம்பிக்…சவுரவ் கங்குலி பேட்டி…!!! Sathya Deva11 August 2024072 views பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் அவரது உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இந்நிலையில், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு சரியான விதி தெரியாது, ஆனால் அவர் இறுதிப் போட்டிக்கு வந்தபோது சரியாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே நீங்கள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்போது, அது தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம். தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்திற்காவது அவர் தகுதியானவர் என தெரிவித்தார்.