செய்திகள் மாநில செய்திகள் பாரா ஒலிம்பிக்….வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரை…!!! Sathya Deva4 September 20240102 views பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.இந்நிலையில், புருனே சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற யோகேஷ், சுமித் அண்டில், ஷீதல் தேவி மற்றும்ராகேஷ்ஜ் குமார் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.