இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பட்டப்பகலில் பரபரப்பு!… பணி முடிந்து வீடு திரும்பிய பெண்… மர்ம நபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!!! dailytamilvision.com17 April 20240146 views ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி கார்டன் 3வது தெருவில் வசித்து வருபவர் தான் பழனிக்குமார் மனைவி சுதா(48). இவர் பிரப்பன்வலசை கிளை நூலகத்தில் நூலகராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து வீடு திரும்பிய போது பட்டணம்காத்தன் சோதனை சாவடி அருகில் சுதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சுதாவை கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதனால் காயமடைந்த சுதா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் சுதா அணிந்திருந்தது கவரிங் நகை ஆகும். இது தொடர்பாக கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.