நீலகிரி மாவட்ட செய்திகள் நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… கனமழை பெய்ய வாய்ப்பு…!! Revathy Anish22 July 20240103 views நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையுடன் சேர்த்து பலத்த காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின்கம்பங்கள் சரிவு ஆகியவற்றால் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி 4 நான்கு தாலுகாவை சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். நீலகிரியில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.