செய்திகள் மாநில செய்திகள் நீட் நுழைவுத்தேர்வு…நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர்…!!! Sathya Deva12 August 20240123 views முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.