செய்திகள் மாநில செய்திகள் நாக்பூரில் தொடரும் கன மழை… வெள்ள அபாய எச்சரிக்கை…!!! Sathya Deva20 July 2024091 views மகராஷ்டிராவில் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது .மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஆறுகள் ,ஏரிகள் போன்றவை நிரம்பியுள்ளனர். . இதனால் சந்திராபூருக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் நாக்பூர்,அமராவதி மற்றும் வார்த்த ஆகிய மாவட்டங்களுக்கு சனிக்கிழமையான இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விடபட்டுள்ளது. நாக்பூர் விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர் இதனால் நாக்பூரில் பல்வேறு இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.