உலக செய்திகள் செய்திகள் தொடரும் ரஷ்யா- உக்ரைன் போர்… குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல்…. 36 பேர் பலி…! Inza Dev9 July 2024079 views உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நீடித்து வருகின்ற நிலையில் நேற்று உக்கிரனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ஏவுகணை தாக்கியுள்ளது. உக்கிரனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு பகுதிகளின் தாக்கல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது .அங்கு உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் 36 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் 171 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுக்கு வரவில்லை. இதனால் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.