உலக செய்திகள் செய்திகள் தேர்தலில் விலகிய காரணம் இது தான்…ஜோ பைடன்…!!! Sathya Deva26 July 2024095 views அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜன நாயக கட்சி அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட அதிபர் ஜோபைடன் அவர்கள் சில நாட்களுக்கு முன் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். தனக்கு பதிலாக கமலா ஹாரிஸ்க்கு தனது ஆதரவை அளிப்பதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக ஜோபைடன் அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ஆபத்தில் இருக்கும் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது எத்தனை பெரிய பதவிகளை விட மிக முக்கியமான ஒன்று எனவும் புதிய தலைமுறைக்கு ஜோதியை வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று நாம் முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இது தான் நம் நாட்டை ஒருங்கிணைக்கும் சிறந்த வழி எனவும் அடுத்த ஆறு மாத காலம் அதிபராக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முழு கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தார்.