செய்திகள் மாநில செய்திகள் தெலுங்கானா மாநிலம்…6 மாவோயிஸ்ட்களை போலீசார் சுட்டனர்…!!! Sathya Deva5 September 20240108 views தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொதகுடம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுண்டரில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த இரு தினங்களுக்கு முன் சத்தீஸ்கரின் பீஜப்பூர் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படை நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.