செய்திகள் மாநில செய்திகள் திருப்பதி ஏழுமலையான் கோவில்…ரூபாய் 300 சிறப்பு டிக்கெட்…!!! Sathya Deva2 August 2024073 views திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறி உள்ளார். மேலும் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மிக விரைவாக தீர்ந்து விடுகிறது. இதனால் திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தருக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூபாய் 300 டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்காக ஆதார் அட்டை மூலம் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.