சினிமா செய்திகள் தமிழ் சினிமா திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ…!!! Sowmiya Balu15 July 20240135 views நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.