செய்திகள் மாநில செய்திகள் தள்ளாடும் வயதில் சுயமாக சம்பாதிக்கும் மூதாட்டி…. பென்ஷன் பணத்தை பிடுங்கும் மகன்கள்….!! Sathya Deva18 July 2024098 views ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அப்பயம்மா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு வயது 72 என்று கூறப்படுகிறது. இவரது 4 மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்த மூதாட்டிக்கு நான்கு மகன் இருந்தாலும் யார் தயவும் எதிர்பார்க்காமல் தானாகவே சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. முதுகு வில்லு போல் வளைந்து இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தம் தாராவிற்கு நடந்து வந்து இரண்டு கடையில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் வேலை செய்யும் கடைகளில் இருக்கும் பழைய அட்டைப் பெட்டிகள், இரும்புகளை போன்றவற்றை சேகரித்து பழைய கடையில் போட்டு வரும் வருமானத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். இவருக்கு வரும் முதியோர் தொகையை அவரது மகன்களே வாங்கிக் கொண்டு விடுகின்றனர் என கூறப்படுகிறது . மூதாட்டி அந்த பணத்தை அவர்களிடம் கேட்பதும் இல்லை. இந்த வயதிலும் தளராது வேலை செய்யும் மூதாட்டியை கண்டு அப்பகுதி மக்கள் வியந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.