செய்திகள் மாநில செய்திகள் தங்கம் மீதான சுங்கவரி குறைப்பு…பட்ஜெட் தாக்கல்…!!! Sathya Deva23 July 20240116 views பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதில் முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு 11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைக்கப்படும் எனவும் பிளாட்டினம் சுங்கவரி 6.4% குறைக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. 20 வகையான தாதுக்கள் மீதான சுங்கவரிகளையும் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தில் சோலார் பேனல் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.GST வரி முறை மேலும் எளிமை செய்யப்படும் என கூறியுள்ளார் .