உலக செய்திகள் செய்திகள் டெலிகிராம் சிஇஓ….பாரிஸில் விமான நிலையத்தில் கைது…!!! Sathya Deva27 August 2024083 views உலகில் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகம் டெலிகிராம் ஆகும். இந்த நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் பாவேல் துரோவை பாரிஸில் உள்ள விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். டெலிகிராம் செயலி சட்டவிரோதமான செயல்களுக்கு துணை புரிவதாகவும் பயனர்களின் தரவுகளை அரசிடம் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுகின்றனர். தற்போது பாவேல் துரோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இவர் மீது உள்ள குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த டெலிகிராம் செயலியை தடை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்ற செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவது என அமைச்சர்கள் கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்து இருந்தார். விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என குறிப்பிடப்படுகிறது.