செய்திகள் மாநில செய்திகள் ஜார்கண்ட் மாநிலம்…ரசகுல்லா சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன்….!!! Sathya Deva19 August 20240108 views ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் அமித் சிங் என்ற சிறுவன் இருந்து வருகிறார் அவர் வெளியூரில் வேலை செய்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பின நிலையில் அந்த சிறுவனின் மாமா ரசகுல்லா வாங்கி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுவன் படுத்துக்கொண்டு செல்போனின் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த ரசகுல்லாவை சாப்பிட்டு உள்ளார். அப்போது ரசகுல்லா அந்த சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது. இதனால் அவர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின் அவரது மாமா ரசகுல்லாவே வெளியே எடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. இதனால் அந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரசகுல்லா சாப்பிட்டு சிறுவன் உயிரிழந்த ச சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.