செய்திகள் மாநில செய்திகள் ஜம்மு காஷ்மீர் தேர்தல்… வேட்பு மனுதாக்கல் செய்த உமர் அப்துல்லா…!!! Sathya Deva4 September 20240104 views மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும்,அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். இந்நிலையில், கண்டர்பால் தொகுதியில் தேசியமாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.