செய்திகள் மாநில செய்திகள் ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு… பயங்கரவாதி ஒருவர் பலி…!! Sathya Deva19 July 2024086 views ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ஜூலை 18 அன்று பயங்கர வாதிகளுக்கும் பாதுகாப்படையினர் இருவருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அருகில் நான்கு பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த வாரத்தில் இது இரண்டாவது ஊடுருவல் முயற்சி என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரில் கெரான் டெக்சரின் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இந்த என்கவுண்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு தொடர் ந்து நடைபெற்று வருவதாகவும் இதை பற்றிய தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.