செவ்வாய் கிரகத்தில் பாறை உள்ளதா..? நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட “பெர்சிவியரன்ஸ்” என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான நெரெட்வா வாலிஸ் -ன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும்போது அம்பு முனை வடிவ பாறையை கண்டெடுத்ததாக நாசா இணையை தளத்தில் தெரிவித்துள்ளது. அந்தப் பாறையில் வெள்ளை கால்சியம் சல்பைட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளைப் பிளவுகள் இருப்பது தெரிந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த பாறையானது பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணியிர்கள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறினார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!