சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம! பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!! Sowmiya Balu25 July 20240111 views தமிழ் சினிமாவில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இவர் தற்போது ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” என்ற படத்தை இயக்கியுள்ளார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்துள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.