சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம! கூடுதல் திரையரங்குகளில் “டிமான்டி காலனி 2” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu23 August 20240144 views தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் இரண்டாவது வாரத்தில் கூடுதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான இந்த திரைப்படம் தற்போது 350 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன.