சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்! ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 4 தமிழ் படங்கள்….!!! Sowmiya Balu25 July 20240106 views வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை நீண்ட விடுமுறை நாட்களாக வருவதால் பல திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது. அந்த வகையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ”தங்கலான்” திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் ”அந்தகன்” படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ”ரகு தாத்தா” திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது இதனை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ”டிமாண்டி காலனி” இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் ஒரே நாளில் நான்கு முக்கிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.